Latestஉலகம்

11.11 இணைய விற்பனை; பொருட்களை ஏற்றி வந்த கார்கோ கப்பல் மாயமா?

தைப்பே, டிச 2 – அண்மையில் நடைப்பெற்ற 11.11 மாபெரும் இணைய விறபனையை தொடர்ந்து அதில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த கார்கோ கப்பல் மின்ஜியாங் கடல்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாயமானதாக கூறப்பட்டுள்ளது.
தைவானிலிருந்து புறப்பட்ட அந்த கார்கோ கப்பல், TaoBao நிறுவனத்திடமிருந்து பொருட்களை ஏற்றி வந்து கொண்டிருந்தது. அந்த மோதலில் 9 ஊழியர்களில் 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், இருவர் மாண்டுள்ளனர். மேலும் 7 பேரை தேடும் வேட்டை தொடர்கின்றது என ETToday  மற்றும் World off Buzz தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்விபத்தில், கப்பலில் இருந்த 879 டன் பொருட்கள் கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தகவலை அறிந்து அதிர்ச்சியில் உரைந்த 100க்கும் மேற்பட்ட பயணீட்டாளர்கள் தங்களின் பொருட்களுக்கான பணத்தை திருப்பி தரும்படி  TaoBao நிறுவனத்திடம் புகார் வழங்கி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தனது பயணீட்டாளருக்கு பதிலளித்த TaoBao நிறுவனம், பொருட்களுக்கான இழப்பீடு மேற்கொள்ளப்படும் என்றும் பயணீட்டாளர்கள் இது தொடர்பாக தொடர்புக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!