Latestமலேசியா

1 எம்.டி.பி தொடர்பான ஒலிப்பதிவு நாடாக்களை எம்.ஏ.சி.சி. ஒப்படைக்க வேண்டும் ; நஜீப் கோரிக்கை

கோலாலம்பூர், ஜன 17 – 1 எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேசனல் விவகாரம் தொடர்பாக தாமும் இதர சில அதிகாரிகளும் நடத்திய கலந்துரையாடல்களைக் கொண்ட ஒலிப்பதிவு நாடாக்களை எம்.ஏ.சி.சி ஒப்படைப்பதை கட்டாயப்படுத்தும்படி முன்னாள் பிரதமர் நஜீப் அதிகாரப்பூர்வமாக வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வாரம் எம்.ஏ.சி.சி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஒலிபரப்பிய அந்த ஒலிப்பதிவு நாடாக்கள் தற்போது நடைபெற்றுவரும் எஸ்.ஆர்.சி இண்டர்நேசனல் மற்றும் 1 எம்.டி.பி தொடர்பான வழக்கில் தமது தற்காப்பிற்கு முக்கிய அம்சமாக இருப்பதால் அவற்றை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனவரி 15ஆம் தேதி தாக்கல் செய்துள்ள தமது வழக்கு மனுவில் நஜீப் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் லத்திபா கோயா எனக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அந்த ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டதன் மூலம் எஸ்.ஆர்.சி மற்றும் 1எம்.டி.பி வழக்குகளில் என்னை சம்பந்தப்படுத்தி சில குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இந்த ஒலிப்பதிவு நாடாக்களில் ஒன்று எஸ்.ஆர்.சி வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது என அந்த செய்தியாளர் கூட்டத்தில் லத்திபா தாமாகவே ஒப்புக்கொண்டிருப்பதையும் தமது வழக்கு மனுவில் நஜீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஒலிப்புதிவு நாடாக்களை ஊடகங்களுக்கு வெளிளியிட்ட அவரது நடவடிக்கையின் மூலம் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்திவிட்டதாக லத்திபா கோயாவுக்கு எதிராக மற்றொரு வழக்கு மனுவை தாக்கல் செய்யவிருப்பதாகவும் நஜீப் கூறினார். எனினும் எப்போது இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

1எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேசனல் மீதான விசாரணையின் தகவல்களை மாற்றும் சதியில் எம்.ஏ.சி.சி.யின் முன்னாள் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அகமட், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடலைக் கொண்ட 9 ஒலிப்பதிவு நாடாக்களை லத்திபா கோயா கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். நஜீப் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர், எம்.ஏ.சி.சியின் முன்னாள் தலைவர் சுல்கிப்ளி அகமட், ஐக்கிய அரபு சிற்றரசின் பட்டத்து இளவரசர் ஷேய்க் முகமட் ஷையேட் அல் நாயன் ,1எம்.டி. பி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேசனல் விவகாரம் தொடர்பான கலந்துரையாடலில் அவர்கள் கலந்துக்கொண்டதை காட்டும் வகையில் இந்த ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மற்றும் 2016ஆம் ஆண்டு ஜூலை 29 தேதிக்கிடையே இந்த தொலைபேசி உரையாடலகளைக் கொண்ட அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சட்டத்துறையின் முன்னாள் தலைவர்களான அப்துல் கனி பட்டாயில், முகமட் எப்ஃபென்டி அலி, பாலிங் எம்.பி அப்துல் அஸிஸ் ரஹிம் . இசான் பெர்டானா நிர்வாக இயக்குனர் சம்சுல் அன்வார் சுலைமான் , எஸ்.ஆர்.சி. இன்டர்நேசனல் முன்னாள் இயக்குனர் சுபோ முகமட் யாசின் , எஸ்,ஆர் சி இன்டர்நேசனல் முன்னாள் தலைம செயல் அதிகாரி நிக் பைசால் அரிப் காமில் அப்துல் அஜிஸ் இஸ்மாயில் மற்றும் டான்ஸ்ரீ சுக்ரி ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

நஜீப்பின் வளர்ப்பு மகன் ரிசா அஸிஸ், பேங்க் நெகாராவின் முன்னாள் அதிகாரி ஹம்ஹாரி நஷாருடின் அம்னோவின் கைருல் அஸ்வான் ஹருன் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி அறிவித்திருந்தது.
அதிகார வரம்பு மீறல், குற்றவியல் சதித்திட்டம் மற்றும் சாட்சியத்தை திசைதிருப்புவது ஆகிய குற்றங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் லத்திபா கோயா கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!