
கொலாலம்பூர், நவ. 5 – 1எம்டிபியின் திருடப்பட்ட சொத்துகள் 5 நாடுகளில் இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் நம்புவதாக அதன் தலைமை ஆணையர் லத்தீபா கோயா தெரிவித்தார்.
அந்த சொத்துகளை அடையாளம் கண்டு நாட்டுக்குக் கொண்டவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லத்தீபா தெரிவிவித்தார்.
சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்போடு அவற்றை அடையாளம் காண வேண்டுமென்றும் அது பெரும் சிக்கலான பிரச்சினை என அவர் வர்ணித்தார்.
அடையாளம் காணப்பட்ட ரிம. 1890 கோடி சொத்துகள் இறுதியான கணக்கு அல்லவென்றும், அது இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.