Latestமலேசியா

ஹுடுட் சட்டத்தை ஆதரிப்பது குறித்து மஇகா மறுபரிசீலிக்க வேண்டும்  – ஜெயகுமார்

கோலாலம்பூர், டிச. 7 – நாடாளுமன்றத்தில் RU355 எனும் ஷரியா சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை  வழங்க    வகைச் செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் ஆதரவு வழங்குவோம் என மஇகா கூறியுள்ளது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவா என பிஸ்எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார்  கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் அந்த சட்ட மசோதா விவாதத்தை இப்போதே கொண்டு வந்தால் தாங்கள் ஆதரவு வழங்குவோம் என மஇகா தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்   அம்னோ தேசிய பேரவையில் கலந்து கொண்ட பிறகு கூறியிருந்தார்.

மத மாற்றம், Allah வார்த்தை பயன்பாடு போன்று பல்வேறு விவகாரங்கள் இன்னும் நீக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில அவற்றை உதாசீனம் படுத்தும் வகையில் அவரின் கருத்து அமைந்துள்ளதாக ஜெயகுமார் கூறினார். அது போன்ற விவகாரங்கள் நம் சமூகத்தில் பல்வேறு பிளவகளை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு தீர்வு காணாமல் நாம் ஹூடுட்  சட்ட   அமலாக்கத்தை  முன்னெடுக்க கூடாது என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!