Latestமலேசியா

ஸாஹிட்டும் அவரது மனைவியும் 18 ஆடம்பர கார்களை வைத்துள்ளனர் – ஜே.பி.ஜே அதிகாரி சாட்சியம்

கோலாலம்பூர்டிச 3 – முன்னாள் துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடியும்,அவரது துணைவியார் ஹமிடாவும் 18 ஆடம்பர வாகனங்களை வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஒரு பிஎம்டபிள்யூ (BMW) 320i(A), அவ்டி (Audi) Q7, மெர்சடிஸ் பென்ஸ் (Mercedes Benz) C.L.S 350 மற்றும இதர வாகனங்களையும் அவர்கள் வைத்துள்ளனர்.

இந்த வாகனங்களில் பெரும் பகுதி 38 என்ற எண் பதிவை கொண்டுள்ளன.

இந்த தம்பதியரிடம் மொத்தம் 20 வாகனங்கள் இருப்பதாகவும் அவற்றில் மூன்று  டோயாத்தா வெல்பயர் வாகனங்களும் இதில் அடங்கும்.

இதுதவிர இரண்டு  ஹார்லி டேவிட்சன் வகை மோட்டார் சைக்கிள்கள் , 2 டுகாத்தி மோட்டார் சைக்கிள்கள் , மூன்று பிஎம்டபிள்யூயூமற்றும் கவாசாகி ஹோண்டா போன்ற உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள்களையும் இவர்கள் கொண்டுள்ளனர்.

இதனை சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குனர் சஹாருடின் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.ஒரு ஆண்டிற்கு 35, 766 வெளியை இவர்கள் சாலை வரியாக செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

ஆக்கால்  பூடி அறநிறுவனத்திற்குச் சொந்தமான லட்சக்கணக்கான வெள்ளியை முறைகேடு செய்ததாக ஸாஹிட்டிற்கு  எதிராக 47 குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.‌ இவற்றின் 12 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்களும் அடங்கும். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையில் சஹாருடின் சாட்சியம் அளித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!