Latestமலேசியா

வேலை நீக்கம் செய்வது எனது பணியல்ல – மாகாதீர்

புத்ராஜெயா, நவ 7 – ஆட்களை வேலை நீக்கம் செய்வது எனது பணியல்ல என எதிர்கட்சியை மகாதீர் சாடியுள்ளார். சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸை பணி நீக்கம் செய்யும்படி வலியுறுத்திய எதிர்கட்சிக்கு பதில் தரும் வகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கடுமையாக விஷயங்கள் எதுவும் நடக்காதவரை, என்னை யாராவது வலியுறுத்தினாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் என பத்திரிக்கையாளர்களிடம் மகாதீர் குறிப்பிட்டார்.

தமிழீல விடுதலைப்புலிகள் தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் தலையிட்டதன் காரணமாக பேரரசரிடம் அறிவுறுத்தி சட்டத்துறை தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் இஸ்மாய்ல் சப்ரி யாகோப் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு சில சமயங்களில் தவறுகள் நடப்பதுண்டு. என்னைக் கேட்டால் எதிர்கட்சியினர் சிலரை நான் பணி நீக்கம் செய்யவிரும்புகிறேன். காரணம் அவர்கள் நிறைய தவறுகளை செய்துள்ளனர். ஆனால் நமக்கு இங்கு சில சட்டவிதிகள் இருக்கின்றன என மகாதீர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!