Latestஉலகம்

வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவன் சுடப்பட்டான் – தைவான் போலீஸ் அதிரடி

தைப்பேய், டிச 14- தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அலுவலகம் முன்பு வெடிகுண்டு வைக்க முயன்ற ஓர் ஆடவனை சந்தேகத்தின் பேரில்  போலீசார் சுட்டனர்.  இச்சம்பவம் தென் தைவான் பகுதியில் இன்று சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. வைக்கப்பட்ட வெடிகுண்டில்களில் மின்கம்பிகள், திரவம் போன்றவைகள் பொருத்தப்பட்டிருந்தன.

தைவானில் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெறவிருக்கிறது. இந்த தேர்தல் பிரதான எதிர்கட்சியான குவோமிங்தாங்குக்கும் நடப்பு ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சிக்கும் இடையே வலுவான போட்டி நடைப்பெறுகிறது. சுடப்பட்ட அந்த ஆடவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
தைவானின் பபொதுத்தேர்தல் பொதுவாகவே எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி சுமூகமாகத்தான் நடைபெறும்.
இந்நிலையில், 2004ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபரான சென் ஷுய் பியான் (Chen Shui-bian) தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மீது துப்பாக்கி துளைக்கப்பட்டதால் அனுதாப வாக்குகளால் அவர் வெற்றிப் பெற்றதாக அந்நாட்டின் எதிர்க்கட்சியான குவோமிந்தாங் சுட்டிக்காட்டியிருந்தது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!