Latestமலேசியா

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டு சுரேஷ்குமாருக்கு ஜாமின் மறுப்பு

கோலாலம்பூர், பிப் 14 – தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டி.ஏ.பியின் மலாக்கா நகரான்மைக்கழக உறுப்பினர் வி.சுரேஷ் குமாருக்கு ஜாமின் வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பயங்கரவாதம் தொடர்பாக குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லோரேன்ஸ் செக்குரா தெரிவித்தார்.

பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் அனுமதிக்கப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சமுக வலைத்தளம் மூலம் ஆதரவு தெரிவித்தாக குற்றச்சாட்டை எதிநோக்கியிருக்கும் யு,எஸ் சுப்ராவுக்கும் இந்த வார தொடக்கத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜைனி மஸ்லான் ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். சொஸ்மா சட்டத்தின் 13ஆவது விதி செல்லுபடியாகும் என்பதால் அதன் அடிப்படையில் ஜாமின் அனுமதி மறுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!