Latestசினிமா

 ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் தகவல் – நடிகர் விக்ரமின் கதாப்பாத்திரம் கசிந்தது

சென்னை, டிச 2- தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் சினிமாவுக்காக தன் உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் மிகவும் திறமைசாலி. தற்போது, விக்ரம் தன் மகன் நடிப்பில் உருவான ஆதித்யா வர்மா திரைப்படத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அதனால் எந்தவொரு படத்திலும் அவர் நடிக்காமல் இருக்கிறார்.

இப்போது, நடிகர் விக்ரம் இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவோடு இணைகிறார். அந்த திரைப்படத்தில் அவர் புகைப்பட கலைஞராக நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும், இந்த திரைப்படத்திற்கு ‘அமர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!