Latestஉலகம்

விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதியை கண்டுபிடித்த சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் – குவியும் பாராட்டுகள்

டிச 3 – சந்திராயன் 2ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் நாசா வெளியிட்ட குறைந்த பிக்சல் கொண்ட புகைப்படங்களை பயன்படுத்தியே சென்னையைச் சேர்ந்த எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளார்.

எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் டிவிட் ஆதாரங்களை வைத்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையைல் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார் எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன்.

சந்திராயன் 2ன் விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகளை நாசா ஆய்வு செய்து அவ்வப்போது படங்களை வெளியிட்டு வந்தது. அந்த படங்களை ஆராய்ந்த தமிழக பொறியியலாளராம் சண்முகம் பின்னர் தனக்கு கிடைத்த தகவல்களை நாசாவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அதில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகள் இருக்கும் இடம் குறித்து தெரிவித்திருந்தார். சண்முக சுப்ரமணியன் அணுப்பிய தகவல்களை ஆராய்ந்த நாசா விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதியை கண்டுபிடித்தது. அதற்கு S என பெயரிட்டுள்ளதாகவும் பிரகடனம் செய்துள்ளது. 
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!