Latestமலேசியா

வாழைமரத்திற்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் சிசு

சிபு, ஜன 17 – வீட்டிற்கு வெளியே குப்பையை வீசவந்த விவசாயி ஒருவர் வாழைமரத்திற்கு அருகே கைவிடப்பட் நிலையில் பெண் சிசு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. குப்பைகளை கொட்டுவதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்த 45 வயதுடைய ஆடவர் அங்குள்ள வாழை மரத்திற்கு அருகே குழந்தையின் அழுகுரலை கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த மரத்தை சுற்றிலும் தேடிப்பார்த்தபோது தொப்புள் கொடியுடன் சிசுவை கண்டதாக சிபு ஓ.சி.பி.டி துணை கமிஷனர் ஸ்டேன்லி ஜோனதன் கூறினார். அந்த சிசுவை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனை குளிப்பாட்டி சுத்தப்படுத்திய பிறகு சிபு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆரோக்கியமாக காணப்பட்ட அந்த சிசுவை போலீஸ் அதிகாரிகள் சிபு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!