Latestமலேசியா

வழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது

ஷா ஆலாம் – நவ, 22 – இங்குள்ள தாமான் ஶ்ரீ மூடாவில் வழிப்பறிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட  17 வயது மாணவனும்  அவனது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அந்த மாணவர் தற்போது நடைப்பெற்று எஸ்.பி.எம் தேர்வு எழுதிக்கொண்டிருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் பஹாருடின் மாட் தாய்ப் தெரிவித்தார். 23 வயது இளைஞரை கடத்தியதாக 19 மற்றும் 25 வயதுடைய மற்ற மூன்று சந்தேக நபர்களுடன் சம்பந்தப்பட்ட மாணவரும் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 14 ம் தேதி ,  உணவக ஊழியர் ஒருவர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புரோடோன் காரில் வந்த நால்வர்‌ உணவக ஊழியரைக் காருக்குள்  இழுத்துச் சென்றனர். அவரது நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்று இந்த சம்பவத்தை உணவகத்தின் மற்றொரு ஊழியரான இந்தோனேசியத் பெண்மணி ஒருவரின் உதவியோடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் தமான்  ஸ்ரீ மூடா பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது திடீரென ஒரு கார் சந்தேகத்தோடு மிகவும் வேகமாக சென்றதை அறிந்ததைக் கண்ட போலீசார் அந்த காரின் டயரை நோக்கி சுட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த கார் கவிழ்ந்தது. உடனடியாக காரில் இருந்த கடத்தப்பட்ட நபரை விடுவித்ததோடு அவரை கடத்திய நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட  நபரை விடுவிப்பதற்கு சந்தேக நபர்கள் 2000 வெள்ளியை கேட்டதாகவும் பஹாருடின் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!