Latestவிளையாட்டு

வலைப்பந்து விளையாட்டில் மலேசியாவுக்கு தங்கம் – அசத்திய மகளிர் அணி

மணிலா, டிச 2 – சீ போட்டியில் மகளிர் வலைப்பந்து குழுவினர் தங்க பதக்கத்தை மீண்டும் தற்காத்துக் கொண்டனர். நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 48 க்கு 42 என்ற புள்ளி கணக்கில் மலேசிய மகளிர் சிங்கப்பூர் குழுவை  வீழ்த்தி மீண்டும் தங்கப்பதக்கத்தை வாகை சூடினர்.
நடப்பு வெற்றியாளரான மலேசியா சீ போட்டியில் வலைப்பந்து விளையாட்டு  அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மூன்றாவது முறையாக தங்கப்பதக்கத்தை வென்று முத்திரை பதித்துள்ளது.
சிங்கப்பூர் குழுவினர் தொடக்கத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மலேசிய பெண்கள் அந்த குழுவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களது முழு திறனையும் ஒன்று திரட்டி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
தொடக்கம் முதல் இறுதிவரை மலேசிய பெண்கள்இந்த ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறித்து மகிழ்ச்சி அடைவதாக தேசிய வலைப்பந்து குழுவின் பயிற்சியாளரான  டிரேசி ரோபின்சன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!