Latestமலேசியா

வணக்கம் மலேசியாவின்  சில வரி செய்திகள் – 14 ஜனவரி 2020

ஜனவரி 14

  • ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
    மணிலா ஜன 14 பிலிப்பின்ஸில் தால் எரிமலை தொடர்ந்து குமுறி வருவதால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்களை வெளியேற்றுவதற்கு ராணுவ வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
  • புக்கிட் பிந்தாங்கில் மெர்சடிஸ் கார் எரிந்தது
    கோலாலம்பூர் ஜன 14 புக்கிட் பிந்தாங்கில் ஆடம்பர மெர்சடிஸ் கார் எரிந்தது. அவசர அழைப்பு கிடைத்தவுடன் அங்கு விரைந்த தீயணைப்பு வீர்ர்கள் அக்காரில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த காரில் 90 விழுக்காடு பகுதி தீயில் அழிந்தது
  • சிலாங்கூரில் 245 மாணவர்களுக்கு இன்புளுன்சா A
    ஷ அலாம் ஜன 14 சிலாங்கூரில் இன்புளுன்சா A சளிக் காய்ச்சலுக்கு உள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 245ஆக அதிகரித்தது. கிள்ளான் மாவட்டத்தில் மட்டும் 35 பள்ளிகளைச் சேர்ந்த 97 மாணவர்கள் சளிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • குளியல் அறையில் தவளை- தீயணைப்பு வீரர்கள் வந்தனர்
    செமினி ஜன 14 குளியல் அறையில் கொடிய விஷம் உள்ள ஏதோ ஒரு பிராணி இருப்பதாக தீயணைப்பு வீர்ர்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்து உட்டியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் அங்கு தவளை இருந்ததைக் கண்டு வியந்தனர். விடியற்காலை 1 மணியளிவில் தாமான் செமினியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து அவரச அழைப்பு கிடைத்தால் அங்கு சென்ற பார்த்தபோது வேறு வழியின்றி தவளையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட்டதாக தீயணைப்பு அதிகாரி ஷைருல் அஸ்லி ரம்லி தெரிவித்த்தார்.
  • அமைச்சரவை மாற்றம் எளிதான பணியல்ல
    கோலாலம்பூர் ஜன 14 அமைச்சரவை மாற்றம் எளிதான பணியல்ல. நம்பிக்கை கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கூட்டணி கட்சிகளின் கருத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதால் அமைச்சரவை மாற்றம் செய்வதற்கு சில காலம் பிடிக்கும் என பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.
  • தீ விபத்தில் இந்திய ஆடவர் பலி
    ஈப்போ ஜன 14 கடை வீடு ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் இந்திய ஆடவர் ஒருவர் பலியானார். 71 வயதுடைய மகாலிங்கம் என்பவர் மாண்டதை தீயணைப்பு படையினர் உறுதிப்படுத்தினர்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!