Latestமலேசியா

வணக்கம் மலேசியாவின் சில வரி செய்திகள் – 15 ஜனவரி 2020

  • உக்ரைன் விமானத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கின

தெஹ்ரான், ஜன 15 – உக்ரைன் விமானத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக தவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் நிகழ்ந்த அந்த தாக்குதலில் உக்ரைன் விமானத்தில் பயண்ம் செய்த அனைத்து 176 பேரும் மாண்டனர். 30 வினாடி இடைவெளியில் இரண்டு ஏவுகணைகளை பயன்படுத்தி அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

  • சூரிய கரடிக் குட்டி வைத்திருந்த பாடாகிக்கு ரிம 27,000 அபராதம்

கோலாலம்பூர், ஜன 15 – தனது வீட்டில் சூரிய கரடிக் குட்டியை வளர்த்து வந்த  ஷரித் சோபியா என்ற  பாடகிக்கு  செஷன்ஸ் நீதிமன்றம்   27,000 வெள்ளி அபராதம் விதித்தது. கரடிக் குட்டியை வைத்திருந்ததற்காக 20,000 வெள்ளி அபராதமும்  அல்லது  ஆறு மாத சிறையும் அதனை  அடைத்து வைத்திருந்ததற்காக 7,000 வெள்ளி அபராதம் அல்லது 4 மாதம் சிறைத்தண்டனை விதிப்பதாக  செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மனிரா முகமட் நோர் தீர்ப்பளித்தார்.

  • காட்டுப் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

குளுவாங், ஜன 15 – சிம்பாங் ரெங்கத்திலுள்ள செம்பனை தோட்டத்தில் காட்டுப் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்றை தீயணைப்பு வீர்ர்கள் பிடித்தனர்.  தகவல் கிடைத்த்தைத் தொடர்ந்து   ஒரு தீயணைப்பு வண்டியைச் சேர்ந்த  10 தீயணைப்பு வீர்ர்கள் அந்த மலைப்பாம்பை பிடிக்கும் முய்ற்சியில் வெற்றி பெற்றனர். ஆறு மீட்டர் நீளமுள்ள அந்த மலைப்பாம்பு பின்னர் காஹாங் காட்டுப் பகுதியில் விடப்பட்டது.

  • பேட்மிண்டன் விளையாட்டாளர் மோமோட்டோ ஜப்பான் புறப்பட்டார்

கோலாலம்பூர் , ஜன 15 –  செர்டாங் மெக்ஸ் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்த  ஜப்பானிய முன்னணி  பேட்மிண்டன் விளையாட்டாளர்  கென்தோ மோமோட்டோவும் இதர இரண்டு விளையாட்டு அதிகாரிகளும்    இன்று காலை  தாயகம் புறப்பட்டனர். இன்று காலை மணி 8.30 கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் வந்தடைந்த  அவர்களை  மலேசிய பேட்மிண்டன் சங்க  தலவர்   முகமட் நோர்ஷா ஷாக்கரியா வரவேற்றார்.  நேற்றிரவு புத்ரா ஜெயா மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அந்த மூவரும்   இன்று காலை மணி 9.40 அளவில் தோக்கியோ செல்லும் விமானத்தில் ஜப்பான் புறப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!