Latestமலேசியா

வங்காளதேசத்சில் சிக்கிக்கொண்ட 270 மலேசிய மருத்துவ மாணவர்கள்

கோலாலம்பூர் வந்து சேர்ந்தனர்
கோலாலம்பூர், மார்ச் 26 – வங்காளதேசத்தில் சிக்கிக்கொண்ட மலேசிய மருத்துவ மாணவர்கள் இன்று காலை கோலாலம்பூர் திரும்பினர். கோவிட் -19 வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மலேசியா உட்பட சில வெளிநாடுகளின் விமானங்கள் தரையிறங்குவதற்கு வங்காளதேசம் தடை செய்துள்ளது. இதனால் டாக்கா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 270 மலேசிய மாணவர்கள் நாடு திரும்புவதில் சிக்கலை எதிர்நோக்கினர்.

தாங்கள் நாடு திரும்புவதற்கு ம.இ.கா உதவ வேண்டுமென இந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ம.இ.கா தனது சொந்த செலவில் இந்த மாணவர்களை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இங்கு கொண்டுவருவதற்கான 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவை ஏற்றுக்கெண்டது. அதோடு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் வங்காளதேச வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் டாக்காவில் தரையிறங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டது.

அந்த வகையில் வங்காளதேச மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 270 மலேசிய மாணவர்களும் இன்று காலை கோலாலம்பூர் திரும்பினர். சரியான நேரத்தில் நாடு திரும்புவதற்கு எல்லா உதவிகளையும் செய்த ம..இ.காவின் தேசிய தலைவரும் மேலவை தலைவருமான செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன், ம.இ.காவின் துணைத்தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் , வெளியுறவு அமைச்சர் ஹிசாமுடின் ஆகியோருக்கு அந்த மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!