Latestஉலகம்

லண்டன் பாலத்தில் தீவிரவாதி தாக்குதல்; இருவர் கொல்லப்பட்டனர்

லண்டன்.  நவ 30 – லண்டன் பாலத்தில் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ‌இருவர் கொல்லப்பட்டனர். எனினும் போலியான தற்கொலைப்படை அங்கி அணிந்திருந்த அந்தத் தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த தீவிரவாதி தாம் வைத்திருந்த கத்தியால் குத்தியதால் இருவர் மாண்டனர். இந்தத் தீவிரவாதியை பொதுமக்கள் தடுத்து நிறுத்து முயற்சித்தபோது அவன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளான். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த  போலீசார் அந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர்.

அந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் காயமடைந்த  மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் போலிஸ் ஆணையாளர் கிரஷிடா டிக் உறுதிப்படுத்தினர். தீவிரவாதியின் தாக்குதலில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மாண்டனர்.  காயமடைந்த மூவரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் எனினும் அவரது நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
லண்டன் பாலத்தின் வடப்பகுதியில் பரபரப்பான மதிய வேளையில் பிற்பகல்  2 மணியளவில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே தாக்குதல் நடத்திய அந்த தீவிரவாதி 28 வயதுடைய உஸ்மான் கான் எனஅடையாளம் கூறப்பட்டது.


பயங்கரவாதம் தொடர்பான நிதி வசூல் செய்தது மற்றும் பயங்கரவாதத்தை திட்டமிட்டது தொடர்பான குற்றச்சாட்டை 2012 ஆம் ஆண்டு அந்த நபர் ஒப்புக்கொண்டான்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!