Latestசினிமாமலேசியா

ரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்

நவ 20 – கடந்த வியாழக்கிழமை வெளியாகி மலேசிய திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது புலனாய்வு. காதல், திகில், மர்மம் என பல கோணங்களைக் கொண்ட புலனாய்வு திரைப்படம் மக்களை கவர்ந்து பாராட்டை பெற்று வருகிறது எனலாம்.

டத்தின் ஶ்ரீ சைலா நாயர், ஷாலினி பாலசுந்தரம், கபில் கணேசன், கிரித்திகா நாயர், சரன் குமார், கே.எஸ் மணியம், இர்பான், சசி தரன், சேபி, பாஷினி என பல மலேசியக் கலைஞர்களின் நடிப்பில் இயக்குனர்கள் ஷாலினி பாலசுந்தரம் மற்றும் சத்திஸ் நடராஜன் இயக்கத்தில் டத்தின் ஶ்ரீ சைலா நாயர் இணை தயாரிப்பில் வெளிவந்துள்ள புலனாய்வு மலேசியத் தமிழ்த் திரைப்பட வரிசையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

சிறுவயதினர் முதல் பெரியவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன என்கின்றனர் ரசிகர்கள். காதல், ஆக்க்ஷன், மர்மம் ஆகைய அனைத்து காட்சிகளும் எந்த ஒரு எதார்த்த (லோஜிக்) மீறல்களும் இல்லாமல், பார்ப்பவர்களை கதையின் ஓட்டத்தோடு அழைத்துச் செல்வதில் வெற்றிப்பெற்றுள்ளது புலனாய்வு என்பது படத்தை பார்த்தவர்களின் கருத்து.

இதில் வரும் பைரவி எனும் கதாபாத்திரம்  டத்தின் ஶ்ரீ சைலா நாயரின் மாறுபட்ட நடிப்புத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளதோடு கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது. இதில் ஐஸ்வரியாவை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் ஏன் நடக்கின்றன ? பைரவியை சுற்றி நடக்கும் மர்மம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது யார்?  இவர்கள் மத்தியில் பிரீத்தி, ஆதி, சிவா, விக்னேஸ், ரவின், ஷரத் என மேலும் பல கதாபாத்திரங்கள் எப்படி தொடர்புபடுத்தப்பட்டுள்ளன ?

இதற்கான பதில் அனைத்தும் படத்தின் இறுதியில் மிக அழகாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

 

கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், இசை என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களை திருப்திபடுத்தி நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் புலனாய்வு திரைப்படம் வணிக ரீதியிலான வெற்றிப்படமாகவும் அமைந்தால் மலேசிய தமிழ்திரைப்பட துறையில் மேலும் மேலும் தரமான படைப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். அதற்கு புலனாய்வு ஒரு புதிய அத்தியாயமாக அமையலாம்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!