Latestமலேசியா

மெர்சிங் போலிடெக்னிக் பட்டதாரி கார் விபத்தில் பலி

மெர்சிங், டிச 2 –  நேற்றிரவு, ஜாலான் பெக்கான், பெக்கான்-ரோம்பின் சாலையின் 23 கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில்  மெர்சிங் போலிடெக்னிக்கைச் சேர்ந்த பட்டதாரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த 61 வயது தந்தையின் இரு கால்களும் ஒடிந்தன. தாயார் எந்தவித காயமும் இன்றி உயிதப்பினார்.

நேற்று மாலை 4.15 மணியளவில், அவரது தந்தை ராசாலி சலீம் புரோட்டான் விரா காரை ஓட்டிச் சென்ற வேளிஅ கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 2 கார்களை மோதியது.

இச்சம்பவம் நிகழந்த போது, மழை பெய்திருந்ததாகவும் சாலை வாகனத்திற்கு பாதுகாப்பான நிலையில் இல்லாததால் கார் கட்டுப்பாட்டை இழந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!