Latestமலேசியா

மீண்டும் ஒரு இடைத்தேர்தலா? ஹனிபா அமானின் தேர்தல் வெற்றி ரத்து – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், டிச 2 – 14வது பொதுத் தேர்தலில் கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் ஹனிபா  அமானின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
இதன் மூலம் சபாவிலுள்ள அந்த நாடாளுமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடை பெறுவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக ஹனிபா அமான் செய்துகொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி  தெங்கு மைமூன்  துவான் மாட் தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதி குழு ஏகமனதாக தீர்ப்பளித்தனர்.
தேர்தல் நீதிமன்றத்தின் நீதிபதி இந்த வழக்கில்‌ ஆதாரங்களை கண்டறிவதில் தவறு எதுவும் புரியவில்லை என தெங்கு மைமூன் தெரிவித்தார்.
தேர்தல் நடவடிக்கையில் தேர்தல் விதிமுறைகள் பரவலாக மீறப்பட்டதால்  இது தேர்தல் முடிவை பாதித்திருப்பதாகவும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
மலாயா தலைமை நீதிபதி  அஸார் முகமட், சபா சரவா தலைமை நீதிபதி டேவிட் வோங் டாக் வா, கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான ரொஹனா யூசோப், மற்றும் நளினி பத்மநாதன் ஆகியோர் இந்த வழக்கை செவிமடுத்த இதர நீதிபதிகள் ஆவர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!