Latestமலேசியா

மாணவர்களின் கருப்பு காலணி; அகற்றும் திட்டம் இல்லை – மகாதீர்

கோலாலம்பூர், ஜன 18 – முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அறிமுகப்படுத்திய பள்ளி மாணவர்களின் கருப்பு காலணி திட்டத்தை அகற்றும் எண்ணம் தமக்கு இல்லை என பிரதமரும் இடைக்கால கல்வி அமைச்சருமான மகாதீர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கருப்பு நிற காலணி குறித்து பள்ளிகளிடம் ஆய்வு நடத்தப்படும் என்ற சுற்றறிக்கை ஒன்று புதன்கிழமை அன்று கல்வி அமைச்சால் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் “மாணவர்கள் எந்த நிற காலணி வேண்டுமென்றாலும் அணியலாம்” என மகாதீர் கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டில், முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லி மாலிக், 2019ஆம் ஆண்டு தொடக்கம் மாணவர்கள் பள்ளிகளுக்கு கருப்பு நிற காலணியை அணியலாம் என்றும், இதன் முழுமையான செயல்திட்டம் 2021ஆம் ஆண்டு தொடங்கும் என அறிவித்திருந்தார்.

இதனிடையே, தாம் இன்னமும் கல்வி அமைச்சரின் பொருப்புகள் குறித்து தெரிந்துக் கொண்டு வருவதாகவும்,  தாமும் கல்வி அமைச்சின் புதிய தலைமை இயக்குனர் ஹபிபா அப்துல் ரஷ்மான் ஆகிய இருவரும் கல்வி அமைச்சுக்கு புதியவர்கள் என்பதால் புதிய கொள்கை எதுவும் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து கலந்தாலோசித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

“நான் நீண்ட நேர சந்திப்பு ஒன்றை நடத்தினேன். எனக்கு வழங்கப்பட்ட தகவல்களை சுதாகரித்துக் கொண்டு வருகிறேன். சில தகவல்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவை அனைத்தையும் நான் ஆராய வேண்டும்” எனவும் மகாதீர் குறிப்பிட்டார்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!