Latestஉலகம்விளையாட்டு

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி ஜப்பானின்  கென்டோ மோமோட்டா வெற்றி

கோலாலம்பூர், ஜன 13 – புக்கிட்  ஜாலில்  தேசிய பேட்மின்டன் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின்
கென்டோ மோமோட்டா
வெற்றியாளர் பட்டத்தை வென்றார். அவர் இறுதியாட்டத்தில் 24-22 , 21-11 என்ற புள்ளிக் கணக்கில்
டென்மார்க்கின் விக்டர் எக்செல்சனை‌ வென்றார்.

எனினும் இந்த வெற்றியை அடைவதற்கு அந்த ஜப்பானிய  விளையாட்டாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட வேண்டியிருந்தது. இவ்வாண்டில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைவதாக உலகின் முதல் நிலை பேட்மின்டன் விளையாட்டாளரான  கென்டோ மோமோட்டா தெரிவித்தார்.

இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில்
சீனா வெற்றி பெற்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் தென்கொரியாவின் கிம் கி ஜுங் -லீ யோங் டே ஜோடி 21-14, 21-16 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் லூ -ஜூன், லியூ யூ சென் ஜோடியை வென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!