Latestமலேசியா

மலேசிய தலைவர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

கோலாலம்பூர், ஜன் 15 – தமிழர்களின் திருநாளான தைப் பொங்கல் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் , இலங்கை மட்டுமின்றி  பிரிட்டன், கனடா ,அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் மிகவும் சிறப்பாக்  கொண்டாடப்படுகிறது.

சமயத்திற்கு அப்பாற்பட்டு விவசாயத்திற்கும் அதற்கு துணையாக இருக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்  ஒற்றுமை உணர்வை  வலியறுத்தும் திருநாளாக உலகம்  முழுவதிலும்  பொங்கல் கொண்டாடப்படுகிறது.  உலக மக்களின் உணவுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பது விவசாயம்தான்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பற்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் சூரியனுக்கும் நன்றி  தெரிவிக்கும் உன்னத நாளாக தமிழர்கள் மத்தியில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில்   மலேசியா மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களும்   பொங்கல் திருநாளுக்கு  வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பொங்குவதுபோல நாட்டு மக்களின் வாழ்வில்  மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்திருக்க வேண்டும் என  பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமது  பொங்கல் வாழ்த்துச் செய்தியில்  கூறியுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தமது பொங்கல் வாழ்த்துகளையும் மகாதீர் தெரிவித்துக்கொண்டார்.

அறுவடை  திருநாளாக கருதப்படும்  பொங்கல் திருநாளை இந்தியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதோடு  விவசாயத்திற்கு   குறிப்பாக நெல் அறுவடைக்கு உதவும்   இயற்கையான சூரியன் மற்றும் பசு மாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் பொங்கல்  கொண்டாடப்படுவதாக  தமது முகநூலில் வெளியிட்டுள்ள  பொங்கல் வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.
மாட்சிமை தங்கிய பேரரசர்  மற்றும் பேரரசியாரும்  தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த பொங்கல்  திருநாள்  அனைவருக்கும்  மகிழ்ச்சியையும்  சுபிட்சத்தையும் கொண்டுவரட்டும் என   பேரரசர் தம்பதியர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தனர்.

பி,கே,ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமும்  மலேசிய தமிழர்களுக்கு தமது தைப்பொங்கல்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இன்று கொண்டாடும்  பொங்கல் திருநாள் தமிழர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் மலர்வதற்கு அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!