Latestமலேசியாவிளையாட்டு

மலேசிய ஆட்டக்காரர் பிரெண்டன் கன் சிலாங்கூர் அணியில் இணைகிறார்

கோலாலம்பூர், டிச 2-  மலேசியாவின் மத்திய திடல் ஆட்டக்காரரான பிரெண்டன் கன் அடுத்த தவணையான 2020ஆம் ஆண்டு மலேசிய லீக்கில்  பேராக் அணியிலிருந்து சிலாங்கூர் அணிக்கு விளையாடவிருக்கிறார். 31 வயதுடைய அவர் இதனை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்தினார்.

2020ஆம் ஆண்டில் எனது குறிக்கோள் மிகவும் தெளிவாக உள்ளது. சிலாங்கூர் அணிக்கு விளையாட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். பிரெண்டன் கன் இதற்கு முன் இரண்டு தவணைக்காக பேராக் அணிக்கு விளையாடியுள்ளார். அதோடு 2018ஆம் ஆண்டு பேராக் அணியின் மலேசிய கிண்ண வெற்றிக்குப் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!