Latestஇந்தியாஉலகம்மலேசியா

மலேசியாவில் 15 நாட்கள் விசாயின்றி தங்க இந்திய, சீன நாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு சலுகை

டிச 29 – 2020 முழுவதும் மலேசியாவிற்கு வருகை புரியும் இந்திய மற்றும் சீன நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் விசா இல்லாமல் 15 நாட்களுக்கு இங்கு தங்கியிருக்கலாம். அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டும் போதுமானது. விசாயின்றி தங்கும் சலுகை 15 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அது நீட்டிக்கப்படாது.  அவர்கள் மலேசியாவிலிருந்து வெளியான நாளிலிருந்து 45 நாட்களுக்குப் பிறகு இங்கு வருவதற்கு மீண்டும் பதியலாம்.

கடப்பிதழ் சட்டத்தின் கீழ் இந்த விசா விலக்களிப்பு சலுகை அரசாங்கப் பதிவேட்டில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த ஆணையில் உள்துறை அமைச்சரின் சார்பில் பிரதமர் துன் மகாதீர் கையெழுத்திட்டுள்ளார்.

சுற்றுப்பயணிகள் மின்னியல் பயணப் பதிவு பக்கத்தில் தனிநபராகவோ அல்லது இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு பெற்றப் பயணச் சேவை முகவர்கள் மூலமாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவு செய்த மூன்று மாதத்திற்குள் அவர்கள் மலேசியாவுக்குள் வரலாம். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது ஏழு எல்லை நுழைவாயில்கள் வழியாக மட்டும் மலேசியாவிற்குள் வரவும் வெளியேறவும் அனுமதிக்கப்படுவர்.

இந்த இரு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட், செலவு செய்வதற்கான போதிய பணம், கிரெடிட் அல்லது வங்கி அட்டை, இங்கு சுற்றிப் பார்ப்பதற்கான பயண திட்டம் ஆகிய ஆதரங்களை வைத்திருக்க வேண்டும். 2020-இல் மலேசியா 3 கோடி சுற்றுப்பயணிகளைக் கவர இலக்கு கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!