Latestசினிமா

மலேசியாவில் ரிலிஸ் ஆகுமா ‘தர்பார்’?

கோலாலம்பூர், ஜன 8 – நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கின்ற ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில்  ரஜினிகாந்த், நயனதாரா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படம் மலேசியாவில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது மலேசிய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியா டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் லைகா நிறுவனத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளது. அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70லட்சம் ரூபாயை லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை மலேசியாவில வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாக உள்ளுர் செய்திதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, லைகா நிறுவனம் தற்போது 4 கோடியே 90 ரூபாயை செலுத்தி அல்லது வங்கி உத்ரவாதம் கொடுத்து முதலில் மலேசியாவில் தர்பார் திரைப்படத்தை வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!