Latestஇந்தியா

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் தமிழக அரசு விருது பெற்றார்

தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், சேவையாளர்கள் ஆகியோருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு விருது வழங்கி பிறப்பித்த விழாவில் உயரிய விருதுகளில் ஒன்றை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமிருந்து பெற்றார்.

தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் 2019ஆம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் விருதுகள், தமிழ்தாய் விருதுகள், தமிழறிஞர்கள் பெயரால் வழங்கப்படும் விருதுகள், உலக தமிழ் சங்க விருதுகள், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, மொழிபெயர்ப்பாளர்கள் விருது, என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

அவற்றில் உலகத் தமிழ்ச்சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் பெற்றார். ஒரு இலட்ச ரூபாய், தகுதி உரை, சான்றிதழ் ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கெளரவித்தார்.

வானம்பாடி, தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய பத்திரிகைகளில் ஆதி.குமணன், ஆதி.இராஜகுமாரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இலக்கிய உறவு பாலத்தை ஏற்படுத்தி அதனை வலுவடையச் செய்ததில்
திரு.இராஜேந்திரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. மலேசிய தமிழ் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியத்திற்கும் தமிழ்நாட்டில் பரவலான அறிமுகத்திற்கும் அங்கீகாரத்திற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் இராஜேந்திரன். சுமார் 15 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்டு வரும் இந்த பணிகளால்  மலேசிய இலக்கியத்தை தமிழக மாணவர்கள் பயிலும் நிலை உருவாகி இருக்கிறது.

தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் மலேசிய இலக்கியங்கள் பாட நூலாக அறிமுக செய்யப்படுவதற்கு பெரும் பங்காற்றி இருக்கிறார். இத்தகைய சேவைகளுக்கு அங்கீகாரமாக தமிழக அரசு இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கிறது. ஜனவரி மாதம் 20ஆம் தேதி  தமிழகத்தின் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருதுகளை சூட்டி சிறப்பு செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!