Latestமலேசியா

மலிண்டோ விமானம் ஜகார்த்தாவில் அவசரமாக தரையிறங்கியது.

கோலாலம்பூர், டிச 3 –  ஜகார்த்தா சுகார்னோ ஹாட்டா அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு  சேவையில் ஈடுபட்டிருந்த தனது  ஏர்  OD315 விமானம் கடுமையான அழுத்தத்தின் காரணமாக மீண்டும் ஜகர்த்தா விமான நிலையத்திற்கு திரும்பியதாக மலிண்டோ விமான நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியது
விமானத்தில் ஏற்பட்ட அழுத்தத்தினால் பயணிகளுக்கான பிராணவாயு சுவாசக் கவசம் உடனடியாக வெளியேறியதாகவும்  மலிண்டோ ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பொதுவான  நடைமுறை விதிமுறையின்படி அவசர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகவும் ஜகார்த்தாவில் மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னதாக விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன்  விமானிகள் தொடர்பு கொண்டனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
மாலை மணி 3.17 அளவில் விமானம் பாதுகாப்புடன் ஜகார்த்தாவில் தரையிறங்கியது. இச்சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி 2.42 அளவில் 85 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்களுடன் அந்த போயிங் 737-900ER ஜகார்த்தாவில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டது.
அந்த விமானம் மாலை மணி 5.20 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க  வேண்டும். பயணிகள் தங்குவதற்கு தற்காலிகமான வசதி செய்து கொடுக்கப்பட்டது .அடுத்த விமானத்தில் பயணிகள் கோலாலம்பூர் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் மலிண்டோ  ஏர் நிறுவனம் தெரிவித்தது.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!