Latestஉலகம்

மருத்துவ பணியாளர்களில் அறுவர் மரணம் 1700பேருக்கு வைரஸ் தொற்றியது

பெய்ஜிங், பிப் 14 –  சீனாவில் கோவிட் 19 வைரஸ் பரவியது முதல் மருத்துவ பணியாளர்களில் அறுவர் மரணம் அடைந்தனர். 1,700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்த உயிர்க்கொல்லி வைரஸின் தொற்றினால் பாதிக்கப்பட்டதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகக் கவசம் மற்றும் நோயாளிகளை கண்காணிப்பதற்கான பாதுகாப்பு மேலாடைகள் போன்ற சாதனங்கள் இல்லாதது மருத்துவர்கள் மற்றும்
உயிருக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் ஏற்பட்டுள்ளது குறித்து எச்சரித்த மருத்துவரை இது குறித்து எவரிடமும் சொல்லக்கூடாது என போலீசார் மிரட்டப்பட்டதோடு வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்ட அந்த மருத்துவர் பிறகு இந்த வைரஸினால் மரணம் அடைந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து சீன மக்கள் சினம் அடைந்துள்ளனர்.

மருத்துவ பணியாளர்களில் 1,716பேருக்கு வைரஸ் தொற்றியிருக்கிறது.
வூஹனில் 1,102பேரும் ஹூபேய் மாநிலத்தில் பல பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணையமைச்சர் செங் யின்ஷின் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!