Latestமலேசியா

மனைவியை தாக்கிய கணவனுக்கு 10 மாத சிறை

கோத்தா கினாபாலு, பிப் 5 –  மனைவியைத் தாக்கிய 34 வயது நபருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 10 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கே.ஜி. மினினிடோட், பெனாம்பாங்கில் உள்ள தனது  வீட்டில் 34 வயது தனது மனைவியை தாக்கியதாக ஜெர்ரி போரிஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

போரிஸ் தனது மனைவியை தாக்கி அவருக்கு காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 323 இன் பிரிவு 323 ன் கீழ் அவருக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது குற்றச்சாட்டை நிருபிக்கப்பட்டால் போரிஸ்க்கு  ஓர் ஆண்டு சிறை அல்லது RM2,000 அபராதம் விதிக்கப்படும்.

ஜெர்ரி போரிஸ்க்கு நான்கு குழந்தைகளைகளும், மேலும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகி அவர்கள்  2019 அக்டோபர் முதல் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அரசு அதிகாரி இன்ஸ்பர்ட் ஆல்பர்ட் பசிரி, தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நாளில், போரிஸின் மனைவி தனது உறவினரின் பிறந்தநாள் விழாவிற்கு அவரின் அனுமதியின்றி சென்றதின் காரணத்தால் கோபமடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர்களுக்குள் நடந்த வாக்குவாதமும் ,சச்சரவும் அண்டை வீட்டாரால் பதிவு செய்யப்பட்டு, பிறகு அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாக இன்ஸ்பெக்டர் பசிரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது போரிஸின் மனைவி  குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசாரிடம் ஒரு புகார் செய்திருப்பதோடு மணவிழக்கு பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

 

.

 

 

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!