Latestமலேசியா

மனைவியின் ஊதாரித் தனம் – தற்கொலைக்கு முயற்சித்த கணவன்

லூசோவ், நவ. 14 – சில தினங்களுக்கு முன்பதாக உலகத்தையே உலுக்கிய விஷயம் 11.11 மாபெரும் இணையத்தள விற்பனையாகும். உலகம் முழுவதும் பலரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கிக் குவித்த தினம் இதுவாகும்.
பலரையும்  குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த மாபெரும் விற்பனையில் மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளை, கணவன்மார்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர் எனலாம்.
அண்மையில் நடைப்பெற்ற இந்த மாபெரும் விற்பனையால் சீனா லூசோவைச் சேர்ந்த 29 வயது கணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தனது 29 வயது மனைவி இவ்வருட விற்பனையில் மட்டும் 300,000 யுவான் அதாவது 177,559 மலேசியா ரிங்கிட் செலவு செய்துள்ளார்.
தங்களது குடியிருப்பின் 33வது மாடியிலிருந்து இரவு 10 மணியளவில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த அந்த ஆடவரை மீட்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.
விசாரித்ததில், கடந்த ஆண்டு விற்பனையின் போது தன் மனைவி 200,000 யுவானுக்கு அதாவது 118,274மலேசியா ரிங்கிட் செலவு செய்திருக்கிறார். அந்தக் கடனை தற்போதுதான் தான் கட்டி முடித்ததாகவும், இப்பொழுது மீண்டும் இவ்வளவு செலவு செய்திருப்பதால் தன்னால் மீண்டும் கடனை கட்ட முடியாது என்பதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்ததாக அந்த கணவர் தெரிவித்துள்ளார்.
இனிமேல் ஊதாரித்தனமாக இருக்க மாட்டேன் என அந்த மனைவி பலமுறை வாக்குறுதி அளித்திருந்தாலும் அவர் திருந்தியதாக தெரியவில்லை என கணவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக தனது மனைவி வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும் தான் தனியாக குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Vetha • Now

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!