Latestஇந்தியா

மது அருந்தியதால் திட்டிய மனைவி – கோபத்தில் தலையை துண்டித்த கணவன்

புது டெல்லி, நவ 13 – மது அருந்தியதால் தன்னை திட்டிய மனைவியின் தலையை துண்டித்த கணவன் அந்த தலையை எடுத்துக் கொண்டு போலிஸ் நிலையத்துற்குச் சென்றுள்ளான். இச்சம்பவம் புது டெல்லி அக்ரோவில் நிகழ்ந்துள்ளது.

30 வயதான நரேஸ் குமார் வாகனம் பழுது பார்க்கும் வேலை செய்து வருபவர். மனைவியின் பெயர் சாந்தி. 17 ஆண்களாக திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ள இவர்களுக்குள் அடிக்கடி மது அருந்துவதால் தகராறு வந்துள்ளது.

சம்பவ தினமான கடந்த ஞாயிறன்று, இரவு 8 மணியளவில் வீட்டில் மது அருந்திய நரேஸை சாந்தி திட்டியுள்ளார். கோபமடைந்த நரேஸ் சாந்தியை தரதரவென அறைக்கு இழுத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தில் குத்தி பின்னர் சாந்தியின் தலையை வெட்டி எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த தலையை ஒரு டின்னில் வைத்து பூட்டி வெளியே எடுத்துச் சென்றுள்ளார்.

மறுநாள் அம்மாவை தேடிய பிள்ளைகள், தலையில்லாம இருந்த சாந்தியின் உடலைக் கண்டு பதறி உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
முன்பதாக அந்த உடலையும் அறையையும் அப்புறப்படுத்தவும் முனைந்துள்ளான் 4 பிள்ளைகளுக்கு அப்பாவான நரேஸ். போலிசார் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button