Latestமலேசியா

மதிய உணவுக்கு ஆடு; இரவு உணவுக்குப் பூனை – பிடிபட்ட ராட்சச மலைப்பாம்பு

ஈப்போ, நவ 12 – 80 கிலோ ராட்சச மலைப்பாம்பு ஒன்றை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர். இந்த மலைப்பாம்பு ஆட்டுப் பண்ணையில் இருந்த ஆடு ஒன்றையும் அங்கிருந்த வளர்ப்பு பூனையையும் விழுங்கியதாக கூறப்பட்டது.

இன்று காலை மணி  8.40 அளவில் தகவல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த  மலைப்பாம்பை பிடித்தனர். அது ஆடு மற்றும் பூனையை விழுங்கிவிட்டு மதமதவென படுத்துள்ளது.

கோப்பேங்   லாடாங் கோபிசான் என்னுமிடத்தில் குடியானவர்  ஒருவக்குச் சொந்தமான ஆட்டுப் பண்ணையில் நுழைந்த அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்கு  ஆறு தீயணைப்பு வீரர்கள் தொடக்கத்தில் சற்று சிரமத்தை எதிர்நோக்கினர். 

இந்தப் பாம்பை   பிடிப்பதற்கு பல்வேறு சாதனங்களை தாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்ததாக தீயணைப்பு படையின் நடவடிக்கை அதிகாரி சப்ரி ஷஹாருடின் தெரிவித்தார்.

இந்த மலைப்பாம்பு பின்னர்  வனவிலங்கு பூங்கா துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சப்ரி ஷஹாருடின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!