Latestமலேசியா

போதைபொருள் விநியோகம் பாலகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை லட்சுமிதேவி விடுதலை

போதைப்பொருள்  குற்றத்திற்காக ஈரானைச் சேர்ந்த இரு பிரஜைகள்  உட்பட மூன்று ஆடவர்களுக்கு பினாங்கு உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தத. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெத்தம்பெத்தமின் போதைப்பொருளை விநியோகித்ததில் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெ. பாலகிருஷ்ணன் (வயது 63 )  முகமட் அபாஸி யுனேஸ் ( வயது 37) மற்றும் சைட் மோஷின் நமஸ்கிவஜ் (வயது 31) ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டில் எதிர்த்தரப்பு சந்தேகத்தை எழுப்புவதில் தவறிவிட்டதாக நீதிபதி ,டத்தோ அக்தார் தாஹிர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் இவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாட்சியங்களும் அடங்கும் என்றும் அவர் சொன்னார். குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தாங்கள் இருந்த இடத்தில் போதைப்பொருள் இருக்கிறது என்பதை அறிந்துள்ளனர் என்பதற்கான ஆதாரமும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அக்தார் தெரிவித்தார்.

அந்த 3 நபர்களும் குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட போதை பொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தையும் அவர்கள் உணர்ந்து  இருந்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார. அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மூவருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி அக்தார் தாஹிர் தீர்ப்பளித்தார். எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட நான்காவது நபான உள் நாட்டைச் சேர்ந்த லட்சுமிதேவி (வயது  56) என்ற பெண்மணி விடுதலை செய்யப்பட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!