Latestமலேசியா

போதுமான நிதி வசதி உள்ளது; 20 லட்சம் லஞ்சம் வாங்க வேண்டியதில்லை – தெங்கு அட்னான்

கோலாலம்பூர், ஜன 17 – தாம்  வெற்றிகரமான வர்த்தகர் என்பதோடு  நிதி ரீதியில் வசதியாக இருந்ததால்   20 லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லையென  தெங்கு அட்னான் தெங்கு மன்சோர்   நீதிமன்றத்தில் தெரிவித்தார். லஞ்சக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள தெங்கு அட்னான்  தற்காப்புவாதத்திற்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து  இன்று சாட்சியம் அளித்தபோது   இதனை தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  டான்ஸ்ரீ  சாய் கின்  கோங்  என்பவரிடமிருந்து   ஹோங் லியோங்   இஸ்லாமிய  பேங்க் மூலம்   20 லட்சம் வெள்ளி காசோலையை லஞ்சமாக பெற்றதாக தெங்கு அட்னான் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்,
சாய்க்கு சொந்தமான   டெவலப்பர்  அசெட்  காயாமாஸ்  சென் பெர்ஹாட்    அந்த காசோலையை  வினியோகித்தாகவும்  நீதிமன்றத்தில்  கூறப்பட்டது.  அப்போதைய கூட்டரசு அராங்கத்தின் கூட்டரசு  அமைச்சர் என்ற முறையில் தமக்கு  வேண்டிய ஒரு நிறுவனம்  தாட்மன்சோரி    ஹோல்டிங்ஸ்  சென் பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலான  20 லட்சம் வெள்ளி  வரவு வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்கிள்ளார் .

இந்த தொகை  தாம் பொருளாளராக இருந்துவரும்   அம்னோவுக்கு  வழங்கப்பட்ட  அரசியல்  நன்கொடையே தவிர தமது சொந்த லாபத்திற்காக அல்ல என அவர் சாட்சியம் அளித்தார்.எனக்காக  20 லட்சம் வெள்ளி பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பணம் எனக்கு தேவையும் இல்லை. அப்போதைய பிரதமர் கேட்டுக்கொண்டதால் நான் அமைசரவையில்  இணைந்தேன். அப்போதே நான்  வெற்றி பெற்ற வர்த்தகராக இருந்து வந்தேன்.

சொத்துடமை, வெட்டு மர உற்பத்தி, வர்த்தகம், விவசாயம் , தங்கும் விடுதி , கால்நடை மற்றும்  உணவு  வர்த்தகத்திலும்  ஈடுபட்டு வந்தாக தெங்கு அட்னான்  தெரிவித்தார். தெங்கு அட்னானுக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருக்கிறது என்பதை  அரசு தரப்பு நிருபித்ததைத் தொடர்ந்து  கடந்த அக்டோபர் மாதம்  நீதிபதி முகமட்  ஜைனி மஸ்லான் வழங்கிய தீர்ப்பில் அவர்  தற்காப்புவாதம் செய்வதற்கு அழைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடரும்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!