Latestமலேசியா

பொங்கல் சுற்றறிக்கை; முஸ்லிம் பெற்றோர்களின் அச்சத்தை போக்க வெளியிடப்பட்டது – கல்வியமைச்சு

கோலாலம்பூர், ஜன 15 – நேற்று சமூக வலைத்தளங்களில் பரவிய பொங்கள் கொண்டாட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொள்ளக் கூடாது எனும் சுற்றறிக்கை முஸ்லிம் பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டதாக கல்வியமைச்சு விளக்கியுள்ளது.

முஸ்லிம் மாணவர்கள் பொங்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பில் பெற்றோர்களிடம் உள்ள அச்சத்தை போக்குவது தொடர்பில் ஜாக்கிம்மின்  நிலைப்பாட்டை அக்கடிதம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
மாறாக பள்ளிகளில் அந்த அறுவடை திருநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை தடை செய்யும் நோக்கம் கொண்டதல்ல என அது கூறியுள்ளது.

அனைத்து இனத்தவர்களுக்கிடையே சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, மரியாதை ஆகிய பண்புகள் விதைக்கும் முயற்சிகளுக்கு கல்வி அமைச்சு ஊக்கம் அளிப்பதாகவும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்ள வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!