Latestமலேசியா

பேராவில் யூ.பி.எஸ். ஆர் தேர்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

ஈப்போ, நவ. 21 – இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதிய மாணவர்கள் பலர் சிறந்த முறையில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சில பள்ளிகளில் மாணவர்களின் முழு தேர்ச்சி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஈப்போவில் உள்ள சென். பிலோமினா தமிழ்ப்பள்ளியி்ல் இந்த ஆண்டு 4 மாணவிகள் 8 ஏ பெற்று சாதனை புரிந்துள்ள வேளையில் சிம்மோரில் உள்ள கிளேபாங் தமிழ்பள்ளியில் நான்கு மாணவர்கள் மற்றும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் இருவரும் , ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி மற்றும் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளியில் தலா ஒரு மாணவியும் முறையே 8 ஏ பெற்றுள்ளனர்.

பல பள்ளிகளில் 8ஏ அல்லது அதற்கும் குறைவான மதிப் பெண்களை எடுக்காவிட்டாலும் முழு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் பேராவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் எழுதியுள்ளதாக ஆசிரியர்கள் பலர் கருத்துரைத்தனர்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு  ஆசிரியர்கள் , பிள்ளைகளின் பெற்றோர்கள் சிறந்த முறையில் பங்கினை ஆற்றியுள்ளனர் என்று கிளேபாங் தமிழ்ப்பள்ளியின்  வாரியக குழுத் தலைவர் எம். கிருஷ்ணசாமி வெகுவாக பாராட்டினார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!