Latestவிளையாட்டு

புயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்

மணிலா, டிச 3 – பிலிப்பின்ஸில் கமுரி புயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டுக்‌ குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த புயல் பிலிப்பின்ஸை நெருங்கி வருவதால் அது எந்த வகையிலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டை பாதிக்கக்கூடாது என்பதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிர கவனத்துடன்‌ அடுத்தகட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

புயலினால் பாதிக்கப்படும் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டாளர்களை வெளியேற்றி அவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டன.
மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புயலினால்  மணிலாவிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடுமையாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் இடங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவிலன் அதிகாரி  யேமன்  சுசாரா தெரிவித்தார்.

முன்கூட்டியே சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புயலின் காரணமாக சீ போட்டிக்கான நிகழ்ச்சி அட்டவணை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

புயல், மழை உட்பட பேரிடர்கள் ஏற்பட்டால் அதற்கு ஏற்றபடி திட்டமிட்டபடி எப்படி போட்டியை நடத்துவது  என்பதற்கான செயல்முறை திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டிருப்பதாகவும்அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சீ போடி ஏற்பாட்டுக் குழுவின் நிர்வாக குழு தலைவர் ஷேல்சோ டைரிட்‌ தெரிவித்தார்.
குறிப்பாக கூடைப்பந்து அல்லது வாலிபால் போன்ற  போட்டிகள் புயலினால் அல்லது மழையினால் பாதிக்கப்படலாம்.தேவையேற்பட்டால் பார்வையாளர்கள் இன்றி இப்போட்டிகள் நடத்தப்படலாம்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!