Latestவிளையாட்டு

பி.டி உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுடில்லி. மார்ச் 9 – இந்தியாவின் முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையான பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பி.பி.சி கௌரவித்தது. இந்திய விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக ஓட்டப்பந்தயத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் விளையாட்டில் இளம் தலைமுறையினருக்கு பெரும் ஊக்குவிப்பாகவும் பி.டி.உஷா திகழ்வதாக பி.பி.சி .புகழாராம் சூட்டியது.

1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயப் போட்டியில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை பறிகொடுத்த பி.டி.உஷாவுக்கு ஏற்கனவே இந்த நூற்றாண்டின் சிறந்த வீராங்கனை எனற கௌரவத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!