Latestமலேசியா

பி.கே .ஆர் வலுவுடன் இருக்கிறது; 90 விழுக்காட்டினர் விசுவாசமாக உள்ளனர்- அன்வார்‌

மீரி,  நவ 23 – பிகேஆர் கட்சி இன்னும் வலுவுடன் இருக்கிறது. கட்சிக்கு 90 விழுக்காட்டினர் விசுவாசமாக இருக்கின்றனர் என பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சரவா  பி.கே.ஆர்  மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள்  முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். நாடு முழுவதிலுமுள்ள  தலைமைத்துவ மற்றும் அடிமட்ட தொண்டர்களில் 90 விழுக்காட்டினர் கட்சியின் மத்திய தலைமைத்துவத்திற்கு விசுவாசமாக இருக்கின்றனர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார் .
எந்த ஒரு கட்சியும் அதன் தொண்டர்களிடம் இருந்து 100 விழுக்காடு ஆதரவைப் பெறுவது சிரமமான ஒன்று என அவர் வர்ணித்தார் ..எனவே கவலைப்பட வேண்டாம்‌ நாம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இருக்கிறோம்.
கெடாவில் ஒரு டிவிஷனை தவிர அனைத்து டிவிஷன்களும் பிகேஆர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.
பகாங்கில் ஒரு டிவிஷனின் தலைவர் மாநில மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆனால் அந்த டிவிஷனின் துணைத் தலைவரும் கட்சியின் இதர கீழ் நிலை  தலைவர்களும்  மாநாட்டில் கலந்து கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
கிளந்தான் மற்றும்  நெகிரி செம்பிலானில் ஒரு டிவிஷன் தலைவரைத் தவிர  மற்ற அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்..மலாக்கா  பி.கே.ஆர் மாநாட்டில் அனைத்து தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்
திரெங்கானுவில் அனைத்து டிவிஷன் தலைவர்களும்  பி.கே.ஆர்  மாநாட்டில் கலந்துகொண்டனர் .இவை எல்லாம் எல்லோரும் பிகார் மாநாட்டில் கலந்துகொண்டனர் மற்றும் நெகிரி செம்பிலான் ஒரு தலைவர் மட்டும் பங்கேற்கவில்லை அனைத்து தலைவர்களும் பிக்சர் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும்  அன்வார் சொன்னார்.
100 விழுக்காடு ஆதரவைப் பெற முடியும் என நீங்கள் கூறலாம் .ஆனால் யாராலும் 100 விழுக்காடு ஆதரவை பெற முடியாது. ஏன் ரஷ்ய அதிபர்  புதின்,அல்லது அமெரிக்க  அதிபர் டோனல் டிரம்ப் மற்றும் வேறு எவருமே  100 விழுக்காடு ஆதரவை பெற முடியாது என அவர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
பிகேஆர் கட்சியில் உட்கட்சி பிரச்சனையும் ,அணியும் தலை தூக்கி இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த தகவலை அவர் நிராகரித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அதன் மாநிலத் தலைவரான  பாரு நியான் இன்றைய சரவா மாநாட்டில் பங்கேற்கவில்லை.
மக்களுக்கான கட்சியின் போராட்டத்தை பிகேஆர் உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது என அன்வர் கேட்டுக்கொண்டார். .நான் அதிகமாக பயப்படுகிறேன் என்று நினைக்க வேண்டாம் .எனக்கு இளம் வயது கிடையாது பணக்காரராக வருவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
 இதற்கு முன்னர் 8 ஆண்டுகாலம் நான் நிதி அமைச்சராக இருந்துள்ளேன்.ஒவ்வொருவரும் வசூல் செய்தனர் .நான் ஒரு காசு கூடபெற்றதில்லை.
ஒவ்வொருவரும் அரசாங்க நிலத்தை பெற்றனர். ஆனால் ஒரு அங்குல நிலத்தை கூட நான் எனக்கு சொந்தமாக்கிக் கொண்டது கிடையாது. எனவே இறைவன் கருணையால் நான் பிரதமரானால் அனைத்து அரசியல்வாதிகளும் லஞ்ச ஊழலுக்கு அல்லது தலைகணம்  பிடித்தவர்கள் இல்லை என்பதை நான் நிரூபிப்பேன் என்று  அன்வார்  தெரிவித்தார். ‌‌‌‌‌‌
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!