Latestமலேசியா

பி.கே.ஆர். இளைஞர் பிரிவு கூட்டம் – அஸ்மினுக்கு அழைப்பு இல்லை




கோலாலம்பூர்.  நவ 13 – பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கும் அழைப்பு கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலிக்கு   மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் நிர்வாகக் குழுவை சேர்ந்த 21 பேர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

டிசம்பர் 6ஆம் தேதி மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கும் பிகேஆர் இளைஞர் பிரிவின் ஆண்டு கூட்டத்தை இம்முறை கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் வான் அலிஸா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் துணைத் தலைவர்தான் வழக்கமாகவே இளைஞர் பிரிவின் மாநாட்டை தொடக்கி வைப்பது வழக்கமாகும் ‌. ஆனால் அந்தப் பாரம்பரியம் இம்முறை மீறப்பட்டிருப்பது  தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இளைஞர் பிரிவின் துணைத்தலைவர் முகமட் ஹில்மான், இளைஞர் பிரிவின் உதவி தலைவர் முகமட் நஸ்ரி யுனுஸ் ,ஜெஸ்டின் ராஜ் சவரிமுத்து உட்பட 21 பேர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

பிகேஆர் கட்சியில் இப்போது பிளவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது என்பதை இந்த முடிவு காட்டுவதாக இளைஞர் பிரிவின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!