Latestமலேசியா

பிளஸ் நெடுஞ்சாலைகளில் 18 விழுக்காடு டோல் கட்டணம் குறைக்கப்படும்  

கோலாலம்பூர், ஜன 16 – நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான பிளஸ் விற்கப்படாது.  அது தொடர்ந்து அரசாங்கத்திற்கு சொந்தமானதாக இருக்கும். பிளஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்த   தனியார் தரப்பினரின் அனைத்து வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் ஆய்வை மேற்கொண்டதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இறுதியாக சிறந்த ஏற்பாடாக பிளஸ் நிறுவனத்தை விற்பனை செய்யப்படாது என்ற  முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக   அவர் தெரிவித்தார். மாறாக அந்த நிறுவனம் கஸானா மற்றும் இ.பி.எப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம்  தொடர்ந்து இருந்துவரும் என  மகாதீர்  கூறினார். கோலாலம்பூரில்  தெனாகா நேசனல் பெர்ஹாட்டின்   இஸ்லாமிய  தொகுதியை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது  பிரதமர் மகாதீர் இதனை தெரிவித்தார்.

பிளஸ் நிறுவனம் விற்கப்படாத நிலையில்  அது   18 விழுக்காடு டோல் கட்டணத்தை குறைக்க வேண்டும்.  இன்றைய   18 விழுக்காடு கட்டண குறைப்பு  30 ஆண்டுகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும்  என்று பிரதமர் கூறினார். பிளஸ் பராமரித்துவரும்  அதன் அனைத்து சாலைகளிலும்  டோல் கட்டணம்  அதிகரிக்கப்படாது.  அதோடு நேரடியாக இந்த கட்டண குறைப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாண்டு இந்த  கட்டண குறைப்பு  அல்படுத்தப்படும் என்றும்  மகாதீர் கூறினார். அரசாங்கத்திற்கு நொந்தமாக  கஸானா நிறுவனம்  51 விழுக்காடு பங்குகளையும்   இ.பி.எப்  49 விழுக்காடு பங்குகளையும் பிளஸ் கொண்டுள்ளது

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!