Latestஉலகம்

பிலிப்பின்ஸ்ஸில் எரிமலையின் சாம்பலினால் மணிலாவில் பள்ளிகள் – வர்த்தக மையங்கள் மூடப்பட்டன

மணிலா ஜன 13-பிலில்பின்ஸ்ஸில் தால் எரிமலை குமுறியதால் தலைநகர் மணிலாவில் பல இடங்கள் சாம்பல் சூழ்ந்ந்து ஒரே இருள் மயமாக உள்ளன. இதன் காரணமாக மணிலா முழுவதிலும் பள்ளிகள் மற்றும் வர்த்தக மையங்கள் மூடப்பட்டன. அந்த எரிமலை பெரிய அளவில் குமுறக்கூடிய சாத்தியம் இருப்பதாக புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் சுனாமி ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தால் எரிமலையை சுற்றிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாயமாக தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உலகில் சிறிய எரிமலையான தால் இன்மும் குமுறிக்கொண்டிருக்கிறது. மணிலாவின் மத்திய பகுதியிலிந்து 70 கிலோமீட்டர் தெற்கேவரை இந்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் மிகவும் மோசமாக சூழ்ந்துள்ளன.

அந்த எரிமலையை கொண்டிருக்கு தீவிலிருந்து 16,000த்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுவாகவே வழக்கமான அந்த சுற்றுலா தீவில் 12க்கும் மேற்பட்ட அதிர்வுகளை தாங்கள் உணர்ந்ததாக பொதுமக்கள் கூறினர். சில சுற்றுப்பயணிகள் எச்சரிக்கையையும் மீறி எரிமலை குமுறுவதை பார்ப்பதற்கான அங்கு சென்றனர். சில இடங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. குடிநீர் வினியோகமும் துண்டிக்கப்பட்டன. மக்கள் வெளியே செல்வதாக இருந்தால் முகக்கவசம் அணிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பல இடங்களில் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மணிலா அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு பகுதி மட்டுமே செய்ல்பட்டது நேற்று 240 விமானப் பயணங்கள் தாமதமாகின. அல்லது ரத்துச் செய்யப்பட்டன. இதனிடையே ஏர் ஆசியாவும் மலேசிய விமான நிறுவனமும் கோலாலம்பூர் – மணிலாவுக்கான விமானச் சேவைகளை ரத்துச்செய்துள்ளன.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!