Latestஉலகம்

பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக ரிஷி சுனாக் நியமனம்

லண்டன்,  பிப் 14  – பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக RISHI SUNAK (ரிஷி சுனாக்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும் ஆவார்.

ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த சஜித் ஜாவித் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதில் 39வயதுடைய ரிஷி சுனாக் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த நான்கு வாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவிருக்கும் இந்த நிலையில் புதிய நிதியமைச்சராக ரிஷி சுனாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்துள்ள ரிஷி பிறகு கருவூல தலைமை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய தகவல் தொழிற்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தியின் புதல்வி அஷிதாவை ரிஷி சுனாக் திருமணம் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!