Latestமலேசியா

பிரதமர் பதவி பரிமாற்றத்தில் மகாதீருக்கு மனமாற்றம் இல்லை – அன்வார்

கோலாலம்பூர், நவ 21 – தமது பிரதமர் பதவியை தம்மிடம் ஒப்படைக்கும் திட்டத்தில் துன் மகாதீருக்கு எந்த மனமாற்றமும் இல்லை என்றும், ஆனால் சில தர்ப்பினர் தற்போதைய நிலையை திசை திருப்ப முயற்சி செய்து வருவது வருத்தமளிப்பதாகவும் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமரோடு நடந்த சந்திப்பில் இது உள்பட சில விவகாரங்கள் பேசப்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார மாற்றத்தில் துன் மகாதீரும் தாமும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பாக்காத்தான் ஹாராபான் கூட்டணி ஒப்புக் கொண்டதிற்கிணங்க அது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். துன் மகாதீர் அதற்கு தமது உத்திரவாதத்தை வழங்கியுள்ளார்.

அதிகார மாற்றம் சுமூகமாகவும் முறைப்படியும் ஒப்புக் கொண்ட காலக்கட்டத்திலும் நடைபெற வேண்டும் என்பதை துன் மகாதீரிடன் தாம் கூறியதாக அன்வார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பெயரை சில தர்ப்பினர் தங்களின் சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் அடுத்தாண்டு கோலாலம்பூரில் நடைபெறவுள்ள APEC மாநாட்டு  ஏற்பாடுகளில் கவனம் செலுத்த தாம் இருவரும் இணக்கம் கண்டுள்ளதாகவும் அன்வார் கூறினார்.

இதனிடையே, அதிகார மாற்றத்திற்கு முன்பு ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், எப்போது அந்த மாற்றம் நடைபெறும் என்பது தொடர்பில்  எழும் பல்வேறு யூகங்களால் ஏற்படும் நெருக்குதலை தணிப்பதன் அவசியத்தையும் அன்வார் உணர்ந்திருப்பதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!