Latestமலேசியா

பிரதமர் தம்பதியருக்கு கலை புத்தாக்க துறையில் கௌரவ டாக்டர் பட்டம்

கோலாலம்பூர், நவ 7- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அவர்கள் இருவருக்கும் கலை புத்தாக்க துறைக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

15ஆவது தேசிய பாரம்பரிய மற்றும் கலை பண்பாட்டு அகாடெமியின் பட்டமளிப்பு சடங்கின் போது அவர்களுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது.

இந்த கௌரவ டாக்டர் பட்டங்களை அந்த துறையின் தலைவர் இணைப்பேராசிரியர் டாக்டர் சடார் சா’டி ஹாஷிம் வழங்கினார். கலையையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பதில் துன் மகாதீரின் சேவையைப் போற்றும் விதமாக அவருக்கும் அவரது துணைவியாருக்கும் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு சடங்கு விழாவில் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சருமான டத்தோ மொஹாமட்டின் கெதாப்பியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button