Latestமலேசியா

பிப் 1 முதல் பிரதமர் துறை வளாகம் செதியா பெர்டானா வளாகமாக பெயர் மாற்றம்

பெடாலிங் ஜெயா, ஜன 20 – கூட்டரசு அரசாங்கத்தின் நிர்வாக நகரான புத்ராஜெயாவில் அரசாங்க கட்டிடங்களுக்கு மறு அடையாளமிடும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் திகதி முதல்  பிரதமர் துறை வளாகம் செதியா பெர்டானா வளாகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புத்ராஜெயா உருவாக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் துறை வளாகத்தின் பெயர் மாற்றம் பிரதமராம் வழங்கப்பட்ட பெயர் அல்ல. புதிய பெயருக்கான போட்டி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில் வெற்றிப்பெற்ற பெயர்தான் இது என பிரதமர் துறை அமைச்சின் அதிகாரி இஸ்சாட் ஜல்மான் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த பெயர் மாற்றும் நடவடிக்கையானது நிபுணத்துவ ரீதியில் செயல்படுகிறதா என மசீசாவின் தலைவர் வீ கா சியாங் சாடியுள்ளார். BRIM எனக்கூறப்பட்டது BSH என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரதமர் துறை வளாகத்தின் புதிய பெயரில் வரும்  செதியா  எனும் சொல் அரசாங்க ஊழியர்கள் அனைவரும் பிரதமருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை வலியுத்துகிறதா என வீ கா சியோங் வினவியுள்ளார்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!