Latestமலேசியா

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிளஸ் நெடுஞ்சாலைகளில் குறைந்த டோல் கட்டணம் அமல்

கோலாலம்பூர், ஜன 17 – அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வாகனத்தை பயன்படுத்துவோருக்கு 18 விழுக்காடு குறைந்த டோல் கட்டணத்தை அரசாங்கம் அமல்படுத்தவிருக்கிறது. வடக்கு –தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்), புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை ( N.K.V.E) வடக்கு தெற்கு லிங்காரன் தெங்கா நெடுஞ்சாலை (ஹெலிட்), 2ஆவது கட்ட கிழக்குக்கரை நெடுஞ்சாலை (LPT2) சிரம்பான் போட்டிக்சன் நெடுஞ்சாலை (SPDH), பட்டர்வெர்த் –கூலிம் நெடுஞ்சாலை ( BKE ) மற்றும் பினாங்கு பாலம் (jpp) ஆகியவற்றில் டோல் கட்டண கழிவு அமல்படுத்தப்படும்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது. கிலோமீட்டருக்கு 13.6 சென்னிலிருந்து 11.15 சென்னாக டோல் கட்டணம் குறைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்தது. இந்த புதிய டோல் கட்டணம் அறிகமுகப்படுத்தப்படும்போது இது குறைவாக இருக்கும்.

இதற்கு முன் 55 வெள்ளி 50 காசாக இருந்த ஜாலான் டூத்தா முதல் அலோஸ்டர் வரையினா டோல் கட்டணம் இனி 45 வெள்ளி 50 காசாக இருக்கும். தற்போது 47 வெள்ளியாக இருக்கும் ஜாலான் டூத்தா முதல் ஸ்கூடாய் வரையிலான டோல் கட்டணம் இனி 38 வெள்ளியாக குறையும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!