Latestமலேசியா

பினாங்கில் விபத்து; பீசா டெலிவரி மோட்டார் ஓட்டி பேருந்து மோதி மரணம்

ஜோர்ஜ்டவுன், நவ 8 – நேற்று மாலை பாயான் லெபாஸ் பகுதியில் பெர்சிம்பாங்கான் செத்தியா அருகே நிகழ்ந்த விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்ததோடு மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதியது. அதன் பின்னர் பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் பயணித்த காரையும் மோதிய பேருந்து இரண்டு மோட்டார் வண்டிகளை மோதி அருகாமையில் இருந்த வீட்டு தடுப்புச் சுவரையும் மோதி கவிழ்ந்தது என பாராட் டாயா போலிஸ் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

பீசா டெலிவரி சேவை வழங்கம் வேலை செய்யும் 16 வயது மோட்டார் ஓட்டி முகமட் சைஃபுல்லா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணும் மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சீராக இருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக தெரிகிறது. இருப்பினும் பஸ் ஓட்டுநர் மீது சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார் அன்பழகன். அந்த பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இந்த விபத்து 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button