Latestஇந்தியா

பாலியல் வழக்கு கொடுத்த கணவன் மனைவியை கத்தியால் குத்திய ஆடவன் – ஜெய்ப்பூரில் பயங்கரம்

ஜெய்ப்பூர், நவ 28- தன் மீது கற்பழிப்பு தாக்குதல் நடத்திய ஆடவனால் கணவன் மனைவி இருவர் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளாகி மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் பகுதியில் புதன்கிழைமையன்று பட்டப்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆடவனின் வெறித்தனமான இந்த தாக்குதல் CCTV கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு தொடக்கத்தில், தன் மீது கற்பழிப்பு தாக்குதல் நடத்திய ஆடவன் மீது பெண் ஒருவர் போலிசில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட அன்வார் எனும் அந்த ஆடவன் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியாகியுள்ளான்.
இந்நிலையில், தான் சிறைக்கு செல்வதற்கு காரணமாக இருந்த அப்பெண்ணை பலிவாங்கவே இக்காரியத்தை அவன் புரிந்ததாக நம்பப்படுகிறது.
தாக்கப்பட்ட இருவரும் பீம்சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தலை மற்றும் வயிற்று பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தர் . அதோடு, அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!